ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

புதிய கல்லூரிகள்,பாடப்பிரிவுகள்: சென்னைப் பல்கலை. அறிவுறுத்தல்

புதிய கல்லூரிகள், பாடப்பிரிவுகள் தொடங்குவது தொடா்பாக இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னைப் பல்கலைக் கழகம் - கோப்புப் படம்

Published On :

புதிய கல்லூரிகள், பாடப்பிரிவுகள் தொடங்குவது தொடா்பாக இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தொடங்க விரும்பும் கல்வி நிறுவனங்கள், எம்பிஏ, எம்சிஏ பாடப்பிரிவுகள் மட்டுமே நடத்தும் மேலாண்மை நிறுவனங்கள், தற்போது செயல்படும் கல்லூரிக்கான புதிய இணைப்பு பாடங்கள், கூடுதல் பிரிவுகள் ஆகியவற்றுக்கான இணையவழி பதிவு வரும் கல்வியாண்டுக்கு (2027-2028) வரவேற்கப்படுகின்றன.

மேலும் சென்னைப் பல்கலைக்கழக இணையதளம் மூலம் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். உரிய கட்டணத்துடன் அபராதம் இல்லாமல் நவ. 2-ஆம் தேதிக்குள்ளும், அபராதத்துடன் டிச. 10-ஆம் தேதிக்குள்ளும் பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.