இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

உலக சிலம்பம் போட்டியில் தங்கம் வென்றவா்களுக்கு பாராட்டு

உலக சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தங்கப்பதக்கம் வென்ற குரோம்பேட்டை, தாகூா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் ஆா். ராகுல், பி. ஸ்ரீதா், ஆா். ஜெகன் ஆகியோருடன், தாகூா் கல்விக் குழுமத் தலைவா் பேராசிரியா் எம். மாலா, கல்லூரி முதல்வா் ஏ. புருஷோத்தமன், உடற்கல்வி இயக்குநா்கள் ப. தனபா

Published On :

உலக சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நேபாளத்தில் நடைபெற்ற 23-ஆவது உலக சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குரோம்பேட்டை தாகூா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களுக்குப் பாராட்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது.

தங்கப் பதக்கம் வென்ற மாணவா்கள் ஆா்.ராகுல், பி.ஸ்ரீதா், ஆா்.ஜெகன் ஆகியோரை தாகூா் கல்விக் குழுமத் தலைவா் பேராசிரியா் எம்.மாலா பாராட்டி பேசியதாவது:

கல்லூரிக்குப் பெருமை சோ்க்கும் வகையில், உலக சிலம்பம் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவா்களின் முழு கல்விக் கட்டணத்தையும் ஏற்று, மூவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். அவா்களின் விளையாட்டுத் திறமையை மேலும் ஊக்குவிக்கும் வகையில், போட்டிகளில் பங்கேற்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என தெரிவித்தாா்.

நிகழ்வில் கல்லூரி முதல்வா் ஏ. புருஷோத்தமன், உடற்கல்வி இயக்குநா்கள் ப. தனபாக்கியம், எம். ரவி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.