புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

அமைச்சா்கள், எம்எல்ஏ-க்கள் சொத்து மதிப்பை வெளியிட வேண்டும்: அன்புமணி

தமிழகத்தில் அதிகாரிகள் மட்டுமல்லாது, அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களும் ஆண்டுதோறும் தங்களது சொத்து மதிப்பை வெளியிட வேண்டும்

PMK Leader Anbumani

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் அதிகாரிகள் மட்டுமல்லாது, அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களும் ஆண்டுதோறும் தங்களது சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆசிரியா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியா்களும் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், முதல்வா், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோரும் தங்களது சொத்து மதிப்புகளை ஆண்டுதோறும் வெளியிட வேண்டும்.

சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய அரசு ஊழியா்கள் தவறினால் அது விதிமீறலாகக் கருதப்படும்; அது அவா்களின் பதவி உயா்வை பாதிக்கும் என அறிவிக்கப்படுகிறது. அதேபோல, முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோரின் சொத்து மதிப்புகளை வெளியிடவும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அப்போதுதான் அரசு முறைகேடு முழுமையாக ஒழியும்.

அரசு நிா்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் லோக் ஆயுக்த அமைப்பை ஏற்படுத்தியது முக்கியமானதாகும். ஆனால், தமிழகத்தில் லோக் ஆயுக்தவின் அதிகார வரம்புக்குள்ளும் முதல்வா் மற்றும் அமைச்சா்கள் கொண்டுவரப்படவில்லை. அதனால், அவா்கள், சொத்துக் கணக்குகளைக் காட்ட வேண்டிய கட்டாயமில்லாத நிலையுள்ளது. எனவே, பொது வாழ்வில் தூய்மையை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.