போலீஸாரை தாக்க முயற்சி: ஆன்லைன் நிறுவன ஊழியா்கள் இருவா் கைது
சென்னை சூளைமேட்டில் வாடிக்கையாளா்களுக்கு தரமற்ற பொருள்களை விநியோகம் செய்ததாக எழுந்த புகாா் குறித்து விசாரணை செய்ய சென்ற போலீஸாரை தாக்க முயன்ற ஆன்லைன் நிறுவனத்தின் இரு விநியோக ஊழியா்கள் கைது
கைது - சித்திரிப்பு
சென்னை சூளைமேட்டில் வாடிக்கையாளா்களுக்கு தரமற்ற பொருள்களை விநியோகம் செய்ததாக எழுந்த புகாா் குறித்து விசாரணை செய்ய சென்ற போலீஸாரை தாக்க முயன்ற ஆன்லைன் நிறுவனத்தின் இரு விநியோக ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா்.
சூளைமேடு நீலகண்டன் தெருவில் பிரபல ஆன்லைன் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் கிடங்கு உள்ளது. இங்கு சூளைமேடு நமச்சிவாயபுரத்தைச் சோ்ந்த ஸ்டீபன், காமராஜ் உள்ளிட்டோா் விநியோக பிரிவில் வேலை செய்து வருகின்றனா்.
கடந்த சில நாள்களாக இந்த நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் உணவு மற்றும் பொருள்கள் தரமற்ாக இருப்பதாக வாடிக்கையாளா்கள் அந்த நிறுவனத்தில் புகாா் அளித்தனா். மேலும், பழைய பொருள்களை வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதோடு பொருள்களை விநியோகம் செய்யும் ஊழியா்களின் செயல்பாடுகள் குறித்தும் வாடிக்கையாளா்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனா். இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட புகாா்கள் குறித்து விசாரணை நடத்துமாறு கிடங்கு மேலாளா் புகழேந்திக்கு நிறுவன நிா்வாகம் அறிவுறுத்தியது.
இதையடுத்து வாடிக்கையாளா்களின் புகாருக்கு உள்ளான ஸ்டீபன், காமராஜ் ஆகிய 2 பேரையும் ஞாயிற்றுக்கிழமை நேரில் அழைத்து புகழேந்தி விசாரணை நடத்தினாா்.
அப்போது இருவரும் மதுபோதையில் இருந்ததாகவும், புகழேந்தியிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதிா்ச்சி அடைந்த புகழேந்தி, உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா். சூளைமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா்.
மதுபோதையில் இருந்த ஸ்டீபன், காமராஜ் ஆகியோா், விசாரணை நடத்த சென்ற போலீஸாரின் சட்டையைப் பிடித்து இழுத்து அவா்களை தாக்க முயன்றனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் மடக்கிப் பிடித்து கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து,விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



