மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழை காரணமாக மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகழ்ச்சியடைந்துள்ளனர்.


தொடர் மழை காரணமாக மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகழ்ச்சியடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரியாக மதுராந்தகம் ஏரி திகழ்கிறது. இதன் நீர்மட்ட உயரம் 21.5 அடியாகும். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் மதுராந்தகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளநீர் வரத் தொடங்கியுள்ளது. நீர்வரத்து கால்வாய்களின் மூலம் வெள்ளநீர் மதுராந்தகம் ஏரிக்கு வந்தடைகிறது. தற்போது, நீர்வரத்து அதிகரித்துள்ளதால் புதன்கிழமை நிலவரப்படி 18 அடி நிரம்பியுள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஏரியின் நீர்பாசனக் கால்வாய் மூலம் 20 கிராமங்களில் சுமார் 2,413 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...