ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இளைஞர் அடித்துக் கொலை: 4 பேர் கைது

காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூர் பகுதியில் இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 9:24 pm

DIN

காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூர் பகுதியில் இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த சகோதரர்கள் பாரிவளவன்(27), ஜெயசீலன் (29). அவர்கள் இருவரும் தங்கள் உறவினரின் வீட்டு விசேஷம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஏனாத்தூருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தனர். 
அதன் பின், விசேஷ நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஏனாத்தூரிலிருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று அவர்களின் மீது மோதுவது போல் சென்றது. 
இதனால் அதிர்ச்சியடைந்த சகோதர்கள் ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநருடனும் அவரது நண்பர்கள் 3 பேருடனும் அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது.
இது கைகலப்பாக மாறியதில், தரங்கம்பாடி சகோதரர்கள் இருவரையும் மரக்கட்டையால் தாக்கிவிட்டு ஆட்டோவில் வந்தவர்கள் தப்பிச் சென்றனர். இத்தாக்குதலில் நிகழ்விடத்திலேயே பாரிவளவன் படுகாயமடைந்து, இறந்தார். ஜெயசீலன் காயமடைந்தார். 
இக்கொலை குறித்த தகவலின் பேரில், காஞ்சிபுரம் கிராமிய போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்தனர். 
ஜெயசீலனை சிகிச்சைக்காகவும், பாரிவளவனின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காகவும் அரசு தலைமை மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி, ஏனாத்தூர் பகுதியைச் சேர்ந்த கமல், பாபு, வினோத், சதீஷ் ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.