கல்பாக்கம் அருகே கணவர் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பெண் தனது கணவர் குடும்பத்தினர் வீட்டிற்குச் சென்றபோது உறவினர்களால் தாக்கப்பட்டதில் இறந்தார்.
செங்கல்பட்டை அடுத்த கல்பாக்கம் அருகில் உள்ள ஆயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (30). ஆட்டோ ஓட்டுநர். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்பாக்கத்தை அடுத்த கிழக்கு கடற்கரைச் சாலை பாலம் ஒன்றின் அருகில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக சதுரங்கப்பட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலையுண்ட செல்வத்தின் மனைவி சந்திரமதி (27) உள்பட சிலரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சந்திரமதி அண்மையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தார். அவர் ஆயப்பாக்கத்தில் உள்ள தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காகச் சென்றார். அப்போது, செல்வத்தின் கொலை காரணமாக வருத்தத்தில்
இருந்த அவரது உறவினர்கள், சந்திரமதியைக் கண்டதும் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கினர். இதில் சந்திரமதி காயமடைந்தார். தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திரமதியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சதுரங்கப்பட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சந்திரமதியை அடித்துக் கொலை செய்தவர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 காரசார விவாதம் - நேரலை! (ஆக. 10)

மகுடம் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

சித்தார்த் மகாதேவன் அரைசதம்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


