சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சர்வதேச மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் நிதி வேண்டி ஆட்சியரிடம் மனு

சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்ள போதிய நிதி வேண்டி சர்வதேச மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் ஜோசப் சுரேஷ், காஞ்சிபுரம் ஆட்சியர்

News image

ஆட்சியரிடம் மனு அளிக்கும் சர்வதேச மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் ஜோசப் சுரேஷ்.

Updated On :30 ஜனவரி 2024, 10:03 pm IST


சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்ள போதிய நிதி வேண்டி சர்வதேச மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் ஜோசப் சுரேஷ், காஞ்சிபுரம் ஆட்சியர் பா.பொன்னையாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.
இதுகுறித்து அவர் மனுவில் கூறியிருப்பதாவது: 
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியில் நான் வசித்து வருகிறேன். சர்வதேச அளவில் விளையாடி வரும் நானும், எனது மனைவியும் மாற்றுத் திறனாளிகள். அதன்படி, கடந்த 2007-ஆம் ஆண்டு சர்வதேச அளவில் சீனா, தைபே, தைவான் நாடுகளில் நடைபெற்ற சக்கர நாற்காலி வாள்சண்டைப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டேன். அதில், வெண்கலப் பதக்கம் பெற்றேன். 
இதையடுத்து, கடந்த 2010-ஆம் ஆண்டு சீனாவில் உள்ள காஞ்சுனில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் பங்கேற்றுள்ளேன். 
இந்நிலையில், வரும் நவம்பர் 7 முதல் 12-ஆம் தேதி வரை ஜார்ஜியா நாட்டில் சர்வதேச அளவில் நடைபெறும் சக்கர நாற்காலிப் போட்டியில் கலந்துகொள்ள பாரா ஒலிம்பிக் கமிட்டி மூலம் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், என்னால் கலந்து கொள்ள முடியாத சூழல் உள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்கு ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 750 நிதி தேவைப்படுகிறது. 
மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த என்னிடம் போதிய நிதியில்லை. எனவே, ஜார்ஜியாவில் நடைபெறவுள்ள சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்ள ஆட்சியர் நிதி உதவி அளித்து உதவ வேண்டும் என அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.