/

கூட்டுறவு வங்கிப் பணியாளர் பேரணி

வடக்கு மண்டல கூட்டுறவு வங்கிப் பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை பேரணி நடத்தினர்

News image

பேரணி நடத்திய தொடக்க கூட்டுறவு வங்கிப் பணியாளர் சங்கத்தினர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:03 pm IST


வடக்கு மண்டல கூட்டுறவு வங்கிப் பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை பேரணி நடத்தினர்.
தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க (டாக்பியா) வடக்கு மண்டலம் சார்பில் காஞ்சிபுரம் ரங்கசாமிக் குளம் அருகே இப்பேரணி நடத்தப்பட்டது. 
பேரணிக்கு சங்கத்தின் மாநிலப் பொருளர் சேகர் தலைமை வகித்தார். மாநில இணைச்செயலர் காமராஜ்பாண்டியன் முன்னிலை வகித்தார். பேரணியானது, ரங்கசாமிகுளம், விளக்கொளி கோயில் தெரு, கீரைமண்டபம் வழியாக ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. பேரணியில், நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு புதிய ஊதியம், ஓய்வூதியம்; நியாய விலைக்கடை ஆய்வில் மாமூலை ஒழித்தல்; காலிப்பணியிடம் நிரப்புதல்; கட்டுநர் இல்லாத நியாய விலைக் கடையில் பணிபுரிவோருக்கு கூடுதல் படி, பதவி உயர்வு உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.