சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் வேண்டாம் என்று வலியுறுத்தி அரும்புலியூர் கிராமத்தினர் திங்கள்கிழமை ஆட்சியரிடம் தனித்தனியாக மனு
அளித்தனர்.
இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டம் அரும்புலியூர் கிராமத்தின் வழியாக சென்னை- சேலம் 8 வழிச்சாலை பசுமைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக, அவ்வழியில் உள்ள 20 வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவை கையகப்படுத்தப்படவுள்ளது. இதனால், எங்களது உடைமைகளை இழக்க நேரிடுகிறது. இழப்பீடு, மாற்று இடம் ஆகியவற்றில் எங்களுக்கு உடன்பாடில்லை.
மேலும், இத்திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், வீடுகளை இழப்போர் ஆகியோர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.
இத்திட்டத்தை எங்கள் பகுதியில் செயல்படுத்த வேண்டாம். எனவே, ஆட்சியர் எங்களது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், மாவட்ட செயலாளார் கே.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்!

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

