தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பிப்.18,19-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம்

மாற்றுத்திறனாளிகள் நலத் திட்டம் குறித்து பிப்.18,19 ஆகிய நாள்களில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

Updated On :14 பிப்ரவரி 2019, 3:13 am IST


மாற்றுத்திறனாளிகள் நலத் திட்டம் குறித்து பிப்.18,19 ஆகிய நாள்களில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசு நலத்திட்டங்களை பொதுமக்கள் அறியாமல் உள்ளனர். இத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில்,  அறிவொளி தீபம் கலைக்குழுவினர் மூலம் பிப்ரவரி 18, 19 ஆகிய இரண்டு நாள்களில்  மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. 
இதில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் செங்கல்பட்டு அலுவலகத்தில் செயல்படுத்தும் திட்டங்கள், பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்படுத்தும் திட்டங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் ஆகியவை குறித்து  விழிப்புணர்வுப் பிரசாரம் செய்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படவுள்ளன. 
பிப்.18 -ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வுப் பிரசாரம் தொடங்கப்படும். இதைத்தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம், பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெறும். இதையடுத்து, 19- ஆம் தேதி காலை 10 மணிக்கு செங்கல்பட்டு பேருந்து நிலையம்,   நண்பகல் 12 மணிக்கு நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிற்பகல் 3 மணிக்கு தாம்பரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வுப் பிரசார நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக  ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.