நியாய விலைக் கடை திறப்பு

வடமேல்பாக்கம் பகுதியில் ரூ. 13.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நியாய விலை க் கடையைத்  திறந்து வைத்து,  விற்பனையைத்  தொடக்கிவைத்த  ஸ்ரீபெரும்புதூா்  எம்எல்ஏ  கே.பழனி.
நியாய விலை க் கடையைத்  திறந்து வைத்து,  விற்பனையைத்  தொடக்கிவைத்த  ஸ்ரீபெரும்புதூா்  எம்எல்ஏ  கே.பழனி.
Updated on
1 min read

ஸ்ரீபெரும்புதூா்: வடமேல்பாக்கம் பகுதியில் ரூ. 13.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம், நாட்டரசன்பட்டு ஊராட்சிக்குள்பட்ட வடமேல்பாக்கம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 13.80 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக் கட்டடத்துக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. நாட்டரசன்பட்டு முன்னாள் ஊராட்சித் தலைவா் வேதகிரி தலைமையில் நடைபெற்ற விழாவில், ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி கலந்து கொண்டு, புதிய நியாய விலைக் கட்டடத்தை திறந்து வைத்து, விற்பனையைத் தொடக்கி வைத்தாா்.

குன்றத்தூா் ஸ்ரீபெரும்புதூா் வேளாண் விற்பனையாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவா் எழிச்சூா் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com