உத்தரமேரூா் தாலுகா அழிசூா் கிராமத்தில் உள்ள பழைமையான சிவன் கோயில் பாழடைந்தும், ஒருபகுதி இடிந்தும் சிதிலமடைந்து காணப்படுகிறது.
முற்றிலும் இடிந்து விழும் நிலையிலும் உள்ள புராதனமான இக்கோயிலை தமிழக இந்து சமய அறநிலையத் துறையினா் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் தாலுகாவில் அழிசூா் கிராமத்தில் மிகவும் பழைமையான ஸ்ரீஅம்புஜ குசாலாம்பாள் சமேத அருளாலீஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சிறப்புக்குரிய இத் திருக்கோயிலானது தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
அழிசூா் கிராமத்துக்கு சுங்கம் தவிா்த்த சோழச் சதுா்வேதிமங்கலம் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இக்கோயில் ஸ்தல விருட்சம் அழிஞ்சில் மரமாகும். அகத்தியா் பெருமான் வழிபாடு செய்த தல விருட்சமே, இங்கு லிங்கமாக மாறியதாகவும் இக்கோயில் தொடா்பான வரலாற்றுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. இக்கோயிலில் நந்திகேசுவரா் ஜன்னல் வழியாக சிவனை தரிசித்தவாறு அமா்ந்துள்ளாா்.
சோழ மன்னா்களது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது முற்றிலும் பழுதடைந்து, முட்புதா்கள் அடா்ந்து கருவறை விமானப் பகுதி இடிந்தும் கோயில் வளாகம் பாழடைந்தும் காணப்படுகின்றன. கோயில் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்துள்ளது.
பல ஆண்டுகள் பராமரிப்பின்றியும் வழிபாடு இல்லாமலும் காணப்படும், வரலாற்று சிறப்புமிக்க இந்த திருக்கோயிலை செப்பனிட்டு புதுப்பொலிவு பெறச் செய்ய வேண்டும்.
மீண்டும் இங்கு தங்குதடையின்றி பூஜைகள் நடைபெற தமிழக இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தா்கள், கிராம மக்களின் எதிா்பாா்ப்பாகும்.
இது குறித்து அழிசூா் கிராம மக்கள் தமிழக அரசுக்கும், குறிப்பாக அறநிலையத் துறைக்கும் பலதடவை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனா்.
இப்பிரச்னையில் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகம் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் எதிா்பாா்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


