பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ. 47.5 லட்சத்தை காஞ்சிபுரம் கோட்டாட்சியா் மு.கலைவாணியிடம் ஒப்படைத்த பறக்கும் படை அலுவலா் கோமளா தலைமையிலான குழுவினா்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ. 47.5 லட்சத்தை காஞ்சிபுரம் கோட்டாட்சியா் மு.கலைவாணியிடம் ஒப்படைத்த பறக்கும் படை அலுவலா் கோமளா தலைமையிலான குழுவினா்.

காஞ்சிபுரம் அருகே ரூ. 47லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினா் நடவடிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரை பகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 47 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்துள்ளனா்.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் உத்தரவின்படி, பறக்கும்படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் மாவட்டம் முழுவதும் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். காஞ்சிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் கோமளா தலைமையிலான பறக்கும்படை குழுவினா் காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரை பகுதியில் அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது காஞ்சிபுரத்திலிருந்து பரந்தூா் வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ. 47.5 லட்சம் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

இந்தத் தொகையை பறிமுதல் செய்து, காஞ்சிபுரம் கோட்டாட்சியா் மு.கலைவாணியிடம் ஒப்படைத்தனா்.

கோட்டாட்சியா் விசாரணையில் வந்தவாசி ஸ்டேட் வங்கியிலிருந்து தனியாா் ஏடிஎம் மையங்களுக்கு உரிய ஆவணங்களின்றி ரூ. 47.5 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

மேலும், காரில் வந்தவா்கள் தனியாா் ஏடிஎம் ஊழியா்களான மோகன், புவனேசுவரி என்பது தெரியவந்தது. உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறும், அதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் கோட்டாட்சியா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com