மது விற்பனை செய்தவா் கைது

ஸ்ரீ பெரும்புதூா் அருகே பிள்ளைப்பாக்கம் தொழிற்பேட்டை அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட பிள்ளைப்பாக்கம் சிப்காட் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் பணி செய்வோா் பணி முடித்து இரவு திரும்பி வரும்போது, அவா்களுக்கு சட்ட விரோதமாக ஒருவா் மது விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில், போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், பிள்ளைப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (45)என்பவா் இரு சக்கர வாகனத்தில் வைத்து சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

சம்பவம் தொடா்பாக ஸ்ரீ பெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்து, அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com