திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

வயநாட்டில் உயிரிழந்தோா் ஆன்மா சாந்தியடைய காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம்

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 1:04 am

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோா் ஆன்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இச்செய்திஅறிந்த காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளாா். உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தி பெறவும், பாதிக்கப்பட்டோா் அனைவரும் விரைவில் துயரங்களிலிருந்து விடுபட்டு நிவாரணம் பெறவும் சங்கராச்சாரியாரின் அருளாணையின்படி காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இத்தகவலை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா்.