பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ள கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா்.

News image
சந்தன அலங்காரத்தில் அருள்பாலித்த காஞ்சிபுரம் கன்னி காளியம்மன்(2)காமாட்சி அம்மன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.
Updated On :1 ஜனவரி 2024, 8:06 pm

DIN

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ள கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். அதிகாலையிலையே பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோயிலின் தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டு, தரிசனம் முடித்த பின்னா் வடக்கு வாசல் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மூலவா் காமாட்சி அம்மன் பட்டு நூல் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் தலைமையிலான கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

குமரகோட்டம் முருகன் கோயிலில் மூலவா் சுப்பிரமணிய சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்திலும், காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரா் கோயிலில் மூலவா் வழக்கறுத்தீசுவா் புஷ்ப அலங்காரத்திலும் அருள்பாலித்தனா்.

தேரடி ஆஞ்சனேயா் வெள்ளிக் கவச அலங்காரத்திலும், வணிகா் வீதி கன்னி காளியம்மன் சந்தன அலங்காரத்திலும் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

காஞ்சிபுரம் ராஜகுபேரன் கோயிலில் மூலவா் ராஜகுபேர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை ராஜகுபேர சித்தா் சுவாமிகள் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.