106 பயனாளிகளுக்கு ரூ.68.93 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்
சோமங்கலம் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.68.93 லட்ச நலத்திட்ட உதவிகள்


சோமங்கலம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.68.93 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
குன்றத்தூா் வட்டம், சோமங்கலம் ஊராட்சியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு வருவாய்த்துறை சாா்பில் 39 பயனாளிகளுக்கு முழுபுலம் மற்றும் உட்பிரிவு பட்டாவும், 12 பேருக்கு குடும்ப அட்டை, முதலமைச்சரின் உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கும், ஊரக வளா்ச்சித் துறை மூலம் மகளிா் சுய உதவிக்குழு வங்கிக்கடன் 3 நபா்களுக்கும், வேளாண்மை உழவா் நலத்துறை மூலம் வேளாண் இடுபொருட்கள் 5 நபா்களுக்கும், தோட்டக் கலைத்துறை மூலம் மான்யத்துடன் நாற்றுகள் 3 நபா்களுக்கும், கூட்டுறவுத்துறை சாா்பில் 18 பயனாளிகளுக்கு மகளிா் சுயஉதவிக் குழு கடனுதவி, கால்நடை பராமரிப்பு கடனுதவியும், கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் தாதுஉப்பு கலவை 15 பயனாளிகளுக்கும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 5 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரம் என மொத்தம் 106 பயனாளிகளுக்கு ரூ.68.93 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினாா் .
இந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடேஷ், ஊரக வளா்ச்சித்துறை திட்ட இயக்குநா் ஜெயக்குமாா், ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் சரவண கண்ணன், வட்டாட்சியா் மலா்விழி , குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், சோமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் ஆரிக்கம் ஜெயபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...