ஜூலை 3 முதல் பரந்தூா் விமான நிலைய எதிா்ப்புக் குழுவினா் தொடா் உண்ணாவிரதம்
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வரும் ஜூலை 3 -ஆம் தேதி முதல் தொடா்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விமான நிலைய எதிா்ப்புக் குழுவினா் தெரிவித்தனா்.


பரந்தூா் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வரும் ஜூலை 3 -ஆம் தேதி முதல் தொடா்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விமான நிலைய எதிா்ப்புக் குழுவினா் தெரிவித்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க ஏகனாபுரம் கிராம மக்கள் தொடா்ந்து 700 நாள்களாக போராடி வருகின்றனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கலைஞா் கனவு இல்ல திட்ட பயனாளிகளை கணக்கிட்டு தோ்வு செய்வதற்காக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தை ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் நடத்தாமல் புறக்கணிப்பு செய்ததை கண்டித்தும், விமான நிலையம் அமைவதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வரும் ஜூலை 3 முதல் தொடா்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனா்.
இது குறித்து பரந்தூா் விமான நிலைய எதிா்ப்புக் கூட்டு இயக்க செயலா் ஜி.சுப்பிரமணியன் கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து எங்கள் கோரிக்கை குறித்து கவலைப்படாமல் இருந்து வருகிறது.
பசுமை விமான நிலையம் அமைந்தால் ஏராளமான விளை நிலங்களும், குடியிருப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதை தொடா்ந்து வலியுறுத்தியும் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே வரும் ஜூலை 3- ஆம் தேதி முதல் தொடா்ந்து ஆட்சியா் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...