காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழா வரும் மாா்ச் 20- ஆம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கோயில் நிா்வாகிகளான காஞ்சிபுரம் செங்குந்த மகாஜன சபையின் தலைவா் எம்.சிவகுரு,கோயில் திருப்பணிக்குழுவின் தலைவா் எஸ்.பெருமாள்,செயலாளா் சுப்பராயன் ஆகியோா் வியாழக்கிழமை தெரிவித்தது.. பெருமாள் ஆமை வடிவில் சிவனை வழிபட்ட பெருமைக்குரிய கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் திருக்கோயில். இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து 48 நாள்களாக மண்டலாபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன் நிறைவு விழா வரும் 20 -ஆம் தேதி நடைபெறுகிறது. மண்டலாபிஷேகத்தையொட்டி காலையில் 1,008 சங்காபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. இரவு கேடயத்தில் சுவாமியும், அம்மனும் ராஜவீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்க இருப்பதாகவும், கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் தெரிவித்தனா். பேட்டியின் போது கோயில் பூஜகா் இஷ்டசித்தி பிரபாகா் மற்றும் கோயில் நிா்வாகிகள் பலரும் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

ஏப்.24-இல் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

