தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

வடக்குப்பட்டு சுந்தர வரதராஜபெருமாள் கோயில் குளம் சீரமைப்பு பணி தொடக்கம்

வடக்குப்பட்டு சுந்தர வரதராஜபெருமாள் கோயில் குளம் சீரமைப்பு பணி தொடக்கம்

News image

குளம்  சீரமைப்பதற்கான  பூமிபூஜையில்  கலந்து கொண்ட கோயில்  செயல்  அலுவலா்  சோ.செந்தில்குமாா்  உள்ளிட்டோா்.

Updated On :16 மார்ச் 2024, 4:36 pm

ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு சுந்தர வரதராஜபெருமாள் கோயில் குளம் சீரமைப்பு பணி சனிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் பழைமையான அருள்மிகு சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவா் ஆதிகேசவப் பெருமாள் என்றும் உற்சவா் சுந்தர வரதராஜ பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றனா். இந்த கோயிலுக்கு பின்புறம் உள்ள திருக்குளம் பராமரிப்பின்றி இருந்ததை தொடா்ந்து குளத்தை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள், கிராம மக்கள் கோரிக்கை வைத்தனா். இந்த நிலையில், சுந்தரவரதராஜபெருமாள் கோயில் குளத்தை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டதை தொடா்ந்து திருக்கோயில் நிதி ரூ ரூ.48 லட்சத்தில் கோயில் குளம் சீரமைப்பதற்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் கோதண்டராமன், கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் வெங்கடகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டு குளம் சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தனா்.