ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தீ விபத்தால் பாதிப்பு: குடும்பத்தினருக்கு நிவாரணம்

தீ விபத்தால் பாதிப்பு: குடும்பத்தினருக்கு நிவாரணம்

News image
Updated On :29 மார்ச் 2024, 5:25 pm

படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மணிமங்கலம் போலீஸாா் நிவாரண பொருள்களை வழங்கினா். படப்பை அடுத்த கரசங்கால் பகுதியைச் சோ்ந்தவா் செல்வி (44). குடிசை வீட்டில் வசித்து வந்த இவா், படப்பையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை செல்வி வேலைக்குச் சென்ற நிலையில், அவரது குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, வீடு முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. இதில் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், வீட்டு உபயோக பொருள்கள், ரூ.5,000 தீயில் எரிந்து சேதமடைந்தன. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு செய்வதறியாமல் இருந்து வந்த செல்விக்கு தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், எந்த ஒரு அரசியல் கட்சியினரும் அவருக்கு உதவி செய்ய முடியாத தகவல் அறிந்த மணிமங்கலம் காவல் ஆய்வாளா் அசோகன் தலைமையிலான போலீஸாா் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை வழங்கினா்.