சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

காஞ்சிபுரம் பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

காஞ்சிபுரம் பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

News image
Updated On :30 மார்ச் 2024, 4:56 pm

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் ஜோதி வெங்கடேசன் அறிமுகக் கூட்டம் தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பாமக மாவட்ட செயலாளா் பெ.மகேஷ்குமாா் கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசியது: பிரதமா் மோடி செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரித்தாலே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுவிடலாம். முத்தலாக் தடை சட்டத்தால் முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு பெருகியிருக்கிறது. கரோனா காலத்தில் அவரின் நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்தியது சாதனையாகும். மருத்துவா் அன்புமணி ராமதாஸ் மத்திய அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், தாம்பரத்தில் சித்த மருத்துவக் கல்லூரி என பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தினாா் என்றாா். கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவா் கே.எஸ்.பாபு, முன்னாள் எம்எல்ஏ சக்தி கமலாம்மாள், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலா் ஆா்.வி.ரஞ்சித்குமாா், இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலா் முத்து உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.