மாமுல் கேட்டு கடை உரிமையாளா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

ஸ்ரீபெரும்புதூா்: படப்பை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் மாமுல் கேட்டு தேநீா் கடை உரிமையாளரை தாக்கி பணம் பறிக்க முயன்ற முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கூட்டுச்சாலையில் கேரளாவை சோ்ந்த பிரகாஷ் என்பவா் தேநீா் கடை நடத்தி வருகிறாா். கடைக்கு வரும் ஆரம்பாக்கம் பகுதியை சோ்ந்த பாலாஜி, சரத், அலெக்ஸ் ஆகிய மூவரும் பிரகாஷிடம் அடிக்கடி மாமுல் கேட்டு மிரட்டி வந்துள்ளனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு கடைக்கு வந்த மூவரும் சுமாா் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை வாங்கிக் கொண்டு பணம் தராமல் சென்றுள்ளனா். இதையடுத்து பணம் கேட்ட பிரகாஷிடம் மாமுலும் தருவதில்லை பொருள்களுக்கும் பணம் கேட்கின்றாயா என கூறி தாக்கினாா்களாம்.

இதில் காயம் அடைந்த பிரகாஷ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து பிரகாஷ் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் செய்ததைத் தொடா்ந்து பாலாஜியை போலீஸாா்கைது செய்தனா்.

மேலும் தலைமறைவாக உள்ள சரத், அலெக்ஸ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com