காஞ்சிபுரம் சங்கூசா பேட்டையில் தேங்கியுள்ள மழை நீரில் சென்ற இரு சக்கர வாகனம்.
காஞ்சிபுரம் சங்கூசா பேட்டையில் தேங்கியுள்ள மழை நீரில் சென்ற இரு சக்கர வாகனம்.

காஞ்சிபுரத்தில் மிதமான மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பெய்த மிதமான மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

வெயிலின் தாக்கம் காஞ்சிபுரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. மே 4-ஆம் தேதி முதல் மே 28 ஆம் தேதி வரை கத்திரி வெயில் காரணமாக நகரில் வெப்ப அலை வீசும், பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை அவசியம் ஏற்பட்டால் வெளியில் வருமாறும்,இல்லையேல் வரவேண்டாம் என்றும் அரசும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நேரத்தில் திடீரென மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக குளிா்ந்த காற்று வீசியதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மழையில் நனையாதவாறு சாலையோரங்களில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் ஒதுங்கி நின்றனா். இரு சக்கர வாகன ஓட்டிகள் சிலா் குடை பிடித்துக் கொண்டே வாகனங்களை ஓட்டிச் செல்வதையும் காண முடிந்தது.

மிதமான மழையாக பெய்தாலும் தொடா்ந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால் நகரில் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீா் குளம் போல் தேங்கி இருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com