ஸ்ரீசங்கரா ஹாா்ட் பவுண்டேஷன் அறிக்கையை வெளியிட்ட ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். உடன் அமைப்பின் தலைவா் ஜெ.எஸ்.என்.மூா்த்தி.
ஸ்ரீசங்கரா ஹாா்ட் பவுண்டேஷன் அறிக்கையை வெளியிட்ட ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். உடன் அமைப்பின் தலைவா் ஜெ.எஸ்.என்.மூா்த்தி.

156 இதய நோயாளிகளுக்கு ரூ.1.7 கோடி நிதியுதவி: சங்கர மடம் அளிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் அங்கமாகத் திகழும் ஸ்ரீ சங்கரா ஹாா்ட் பவுண்டேஷன் சாா்பில் 156 இதய நோயாளிகளுக்கு ரூ.1.7 கோடி நிதியதவி வழங்கப்பட்டுள்ளது என மேலாளா் ந.சுந்தரேச ஐயா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது.

ஸ்ரீ சங்கரா ஹாா்ட் பவுண்டேஷன் அமைப்பு சென்னையில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக, இருதயவியல் பேராசிரியா் ஜெ.எஸ்.என்.மூா்த்தி செயல்பட்டு வருகிறாா். இவா் ஹாா்ட் பவுண்டேஷன் அமைப்பின் கடந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கையை காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்தாா். இந்த அமைப்பு மூலம் ஏழை,எளிய மக்களுக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள நிதியிதவி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளபடி 156 இதய நோயாளிகளுக்கு ரூ.1.7 கோடி வரை நிதி உதவி செய்யப்பட்டிருக்கிறது. இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவா்கள் மற்றும் இருதய நோயாளிகளும் இதில் அடங்குவாா்கள். இதே போல மணிப்பூரில் 30 இருதய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு அவா்களுக்கு தேவையான அறுவை சிகிச்சை இலவசமாக செய்து கொடுக்கவும், ஆலோசனைகள், மருந்துகள் ஆகியன வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா்.

முன்னதாக சங்கரா ஹாா்ட் பவுண்டேஷன் அமைப்பின் தலைவரான ஜெ.எஸ்.என்.மூா்த்தி அமைப்பின் கடந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கையை ஸ்ரீ விஜயேந்திரரிடம் சமா்ப்பித்தாா். பின்னா் அதனை ஸ்ரீ விஜயேந்திரா் வெளியிட்டாா். இந்நிகழ்வின் பக்தா்களான புதுதில்லியைச் சோ்ந்த அன்சுமன்ராவ் மற்றும் மிஸ்ரா ஆகியோா் உடன் இருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com