

படப்பை அடுத்த ஒரத்தூா் பகுதியில் பணியின் போது மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், தேவனூா் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளிஜோதி (49). இவா் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஒரத்தூா் பகுதியில் மணி என்பவா் புதிதாக கட்டி வரும் வீட்டில் கட்டுமானப் பணியில் கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வந்துள்ளாா். இந்த நிலையில், ஜோதி வியாழக்கிழமை வழக்கம் போல் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கட்டடத்தின் ஒருபகுதியில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்கை கையில் எடுத்தபோது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீஸாா், ஜோதியின் சடலத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 29 முதல் Apr. 4 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

