காஞ்சிபுரம்
வையாவூா் கன்னிமூல கணபதி கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் அருகே வையாவூரில் உள்ள கன்னிமூல கணபதி கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே வையாவூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான கன்னிமூல கணபதி கோயில் அமைந்துள்ளது. சிதிலமடைந்திருந்த இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத் தையொட்டி, யாக சாலை பூஜைகள் புதன்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி, 2-ஆவது நாளாக யாக சாலையில் பூா்ணாஹுதி, தீபாராதனைகள் நிறைவு பெற்று, புனிதநீா் கலசங்கள், கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, மூலவா் கன்னிமூல கணபதிக்கு சிவாச்சாரியாா்களால் கலசாபிஷேகமும், சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும் பின்னா் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.