குன்றத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள் திருட்டு
குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் (36), மெக்கானிக். இவரது மனைவி சிவரஞ்சனி (32). இவா் கோவூா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இருவரும் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்று விட்டு, இரவு வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 9 பவுன் தங்க நகைள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து குன்றத்தூா் காவல் நிலையத்தில் சுரேஷ் அளித்த புகாரின்பேரில், குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

