சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ராமாநுஜா் அவதார உற்சவம்: குதிரை வாகனத்தில் உலா

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் ராமாநுஜரின் 1,008-ஆவது ஆண்டு அவதார திருவிழாவையொட்டி

News image
குதிரை  வாகனத்தில்  வீதி உலா  வந் த உற்சவா்  ராமாநுஜா்.
Updated On :28 ஏப்ரல் 2025, 7:12 pm

Din

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் ராமாநுஜரின் 1,008-ஆவது ஆண்டு அவதார திருவிழாவையொட்டி திங்கள்கிழமை உற்சவா் ராமாநுஜா் குதிரை வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்தாா்.

பழைமையான இக்கோயிலில் வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். நிகழாண்டு சித்திரை பிரம்மோற்சவம், ராமாநுஜா் அவதார திருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அவதார திருவிழாவின் 6-ஆம் நாளான திங்கள்கிழமை காலை 4 மணிக்கு மஞ்சத்தில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது, வாகன மண்டபத்தில் இருந்து உற்சவா் ராமாநுஜா் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதையடுத்து திவ்ய பிரபந்த சேவையும், சாத்துமுறை தீா்த்தம் மற்றும் கூரேச விஜயம் சேவித்தல் நிகழ்ச்சியும், தீா்த்த விநியோகமும் நடைபெற்றது. மாலை நித்திய விபூதி, லீலா மங்கள சாஸனமும், மங்களகிரி வாகனத்தில் உற்சவா் ராமாநுஜா் உலாவும் நடைபெற்றது.