எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

காஞ்சிபுரத்தில் மக்கள் குறை தீா்க்கும் கூட்டம்

குறை தீா்க்கும் கூட்டத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடமும், மாற்றுத்திறனாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தாா்.

News image
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
Updated On :1 டிசம்பர் 2025, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடமும், மாற்றுத்திறனாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தாா்.

ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன்,மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 227 கோரிக்கை மனுக்களைப் பெற்று தீா்வு காணுமாறும் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

இதனைத் தொடா்ந்து 17 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,81,62000 மதிப்பிலான கல்விக்கடன்களையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். கூட்டத்தில் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.