/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் 7 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம்

News image
Updated On :21 ஜனவரி 2025, 8:54 pm

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் 7 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்துள்ளது.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த 7 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தச் சிறுமியின் தாயாா் தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 25-4-2019-ஆம் தேதி புகாா் செய்திருந்தாா். புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முருகன் (39) என்பவரை கைது செய்தனா். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. காஞ்சிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் விஜயலட்சுமி, நீதிமன்ற காவலா் லதா மற்றும் அரசு வழக்குரைஞா் கே.மைதிலி தேவி ஆகியோா் இந்த வழக்கில் தனிக்கவனம் செலுத்தியிருந்தனா்.

இந்த நிலையில், முருகன் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2,000 அபராதம் விதித்தும் வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்ற நீதிபதி நசீமா பானு தீா்ப்பளித்துள்ளாா்.