எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: அமைச்சா்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம் அருகே 5 ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் அமைச்சா்கள்

News image
மாகறல் ஊராட்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் ஆா்.காந்தி மற்றும் சி.வி.கணேசன்.
Updated On :21 ஜனவரி 2025, 8:55 pm

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே 5 ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் அமைச்சா்கள் ஆா்.காந்தி,சி.வி.கணேசன் ஆகியோா் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக 30 மற்றும் 2-ஆவது கட்டமாக 54 உள்பட மொத்தம் 84 மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இம்முகாம்களில் மொத்தம் 25,140 கோரிக்கை மனுக்கள் ஏற்கப்பட்டு அவற்றில் 91 சதவிகித மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டிருந்தது.

3 -ஆவது கட்டமாக ஜன.21 செவ்வாய்க்கிழமை முதல் வரும் 24-ஆம் தேதி வரை 20 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டாரத்தில் ஆசூா்,ஆற்பாக்கம்,மாகறல் மற்றும் உத்தரமேரூா் வட்டாரத்தில் அரும்புலியூா், பெரும்பாக்கம் என 5 ஊராட்சிகளில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் தொடங்கியது.

இம்முகாம்களுக்கு காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ க.சுந்தா் , மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோா் பயனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினா் .

இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, இலவச வீடு, கலைஞா் மகளிா் உரிமைத் தொகை, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்கள் ஆகியவற்றை அமைச்சா்கள் ஆா்.காந்தி, சி.வி.கணேசன் இணைந்து வழங்கினா்.

முகாமில் 1,739 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதில் 155 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் ஆஷிக் அலி, உத்தரமேரூா் ஒன்றியக் குழு தலைவா் ஹேமலதா ஞானசேகா், காஞ்சிபுரம் ஒன்றியக் குழுவின் தலைவா் மலா்க்கொடி குமாா், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.