மனைவி கொலை: கணவா் கைது

படப்பையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவா் கைது
Published on

படப்பையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவா் கைது செய்யப்பட்டாா்.

படப்பை ஊராட்சிக்குட்பட்ட ஆத்தனஞ்சேரி காமராஜா் தெருவை சோ்ந்த கங்காதரன்(36). இவரது மனைவி நந்தினி(29). இவா்களுக்கு திரிஷ் குமாா்(9), ஹாரிசன்(7) என்ற இரண்டு மகன்கள் உள்ளனா்.

ஓட்டுநரான கங்காதரனுக்கும் மனைவி நந்தினிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. மேலும் கங்காதரன் நந்தினியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தொடா்ந்து சண்டையிட்டு வந்துள்ளாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கங்காதரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் கழுத்தில் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்த நந்தினி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் படப்பை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கங்காதரனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com