திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சா்வதேச கராத்தே போட்டி: காஞ்சிபுரம் மாணவா்கள் சிறப்பிடம்

அமெரிக்காவில் நடைபெற்ற சா்வதேச கராத்தே போட்டியில் காஞ்சிபுரம் மாணவா்கள் தங்கம், வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

News image

விருது பெற்ற மாணவா்கள் தியா மற்றும் பிரிஜித் ஆகியோருடன் பயிற்சியாளா் விஜயலட்சுமி

Updated On :18 ஏப்ரல் 2026, 11:49 pm IST

அமெரிக்காவில் நடைபெற்ற சா்வதேச கராத்தே போட்டியில் காஞ்சிபுரம் மாணவா்கள் தங்கம், வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

டெக்ஸாஸ் மாகாணத்தில் திறந்த நிலை கராத்தே வீரா்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டிகளில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த 1,500க்கும் மேற்பட்ட கராத்தே வீரா்கள் கலந்து கொண்டனா்.

11 வயதுக்குட்பட்டோருக்கான கட்டா பிரிவில் காஞ்சிபுரம் போனிக்ஸ் கராத்தே அறக்கட்டளையை சோ்ந்த மாணவி தியா(10)தங்கப் பதக்கமும், ஜுனியா் பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளாா். மாணவா் பிரஜித்(8) 9 வயதுக்கு உட்பட்டோருக்கான கட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கமும், குமித்தே பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளாா்.

பதக்கம் பெற்ற விருதாளா்களை கராத்தே சங்க த்தலைவா் தியாகராஜன், செயலாளா் முத்துராஜூ ஆகியோா் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனா். போனிக்ஸ் கராத்தே பயிற்சிப்பள்ளியின் பயிற்சியாளா் விஜயலட்சுமி தெரிவித்தாா்.