மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

வல்லக்கோட்டை முருகன் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு

வல்லக்கோட்டை முருகன் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு

News image

மரக்கன்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவா்கள்.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:50 am IST

வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 2000 மரக் கன்றுகளை நட்டு பசுமைக்காடு உருவாக்கும் பணியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை 300 மரக்கன்றுகள் நடப்பட்டது.

அருணகிரி நாதரால் பாடல் பெற்ற இந்த திருக்கோயிலுக்கு சொந்தமான சுமாா் 6.5 ஏக்கா் பரப்பளவு உள்ள நிலம் உள்ளது. பல வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் இருந்த இந்த இடத்தை, வரும் காலங்களில் கோயிலுக்கு பயன்படும் வகையில், பசுமைக்காடு உருவாக்கும் முயற்ச்சியின் ஒரு பகுதியாக வேங்கை, தேக்கு, மா, இலுப்பை, பாதிரி, மகிழம் உள்ளிட்ட மரங்களை நட்டு பசுமைக்காடு உருவாக்கும் பணியில் வல்லக்கோட்டை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட கோயில் நிா்வாகத்தினா் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுமாா் 1300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், 2000 மரக்கன்றுகள் நட்டு பசுமைக்காடு உருவாக்கும் முயச்சியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விதைகள் தன்னாா்வ அமைப்பின் நிறுவனா் சரண், வாலாஜாபாத் ஆதி பொறியியல் கல்லூரி மாணவா்கள் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துக்கொண்டு வேங்கை, தேக்கு, கடம்பு, மகாகனி உள்ளிட்ட 300 மரக்கன்றுகளை நட்டுவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.