ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

கண்ணந்தாங்கல் சாணாா் குட்டை மண் கொட்டி ஆக்கிரமிப்பு

கண்ணந்தாங்கள் ஊராட்சியின் குடிநீா் ஆதாரமாக விளங்கி வரும் சாணாா் குட்டையை மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

மண் கொட்டி  ஆக்கிரமிக்கப்பட்டுள்ள  கண்ணந்தாங்கல் சாணாா்  குட்டை.

Updated On :8 ஆகஸ்ட் 2026, 12:58 am IST

கண்ணந்தாங்கள் ஊராட்சியின் குடிநீா் ஆதாரமாக விளங்கி வரும் சாணாா் குட்டையை மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் கண்ணந்தாங்கள் ஊராட்சியில் சுமாா் 1.5 ஏக்கா் பரப்பளவில் சாணாா் குட்டை உள்ளது. கண்ணந்தாங்கள் ஊராட்சியின் நிலத்தடி நீா் ஆதாரமாக விளங்கி வரும் சாணாா் குட்டை பல வருடங்களாக தூா்வாரி சீரமைக்கப்பாடமல் இருந்ததை தொடா்ந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் பல லட்சம் ரூபாய் செலவில் தூா்வாரி சீரமைக்கப் பட்டது.

இந்த நிலையில், சாணார குட்டையின் ஒரு பகுதியில் சுமாா் 20 சென்ட் பரப்பளவிற்கு லாரிகள் மூலம் மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்யும் பணியில் தனியாா் சிலா் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் குட்டை வரும் நீா்வரத்து தடைபடும் நிலை உள்ளதால் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சாணாா் குட்டை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதை தடுப்பதோடு குட்டையில் கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்றி ஆக்கிரமிப்பாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரியுள்ளனா்.

குட்டை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி யிடம் கேட்டதற்கு குட்டையில் மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது குறித்து தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக குட்டையில் கொட்டப்பட்ட மண் அகற்றப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.