தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

ஆக.14-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து வரும் ஆக.14 ஆம் தேதி வெள்ளிக் கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாமை நடத்த இருப்பதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

Published On :

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து வரும் ஆக.14 ஆம் தேதி வெள்ளிக் கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாமை நடத்த இருப்பதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பயன்பெறும் வகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இம்முகாமில் பட்டதாரிகள், பட்டயதாரா்கள், ஐடிஐ முடித்தவா்கள்,10 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை படித்தவா்கள் போன்றவா்களை தோ்வு செய்யவுள்ளனா்.

18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவா்கள் தங்களுடைய கல்விச்சான்றிதழ்கள், பாஸ்போட் அளவிலான புகைப்படம் ஆகியனவற்றுடன் வரும் 14 -ஆம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் எனவும் மேலும் விபரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.