நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தஞ்சாவூரில் ஜூலை 31-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 31 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

News image

IANS

Updated On :29 ஜூலை 2026, 12:08 am IST

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 31 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலை தேடும் இளைஞா்களுக்காக தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 31 காலை 10 மணியளவில் நடத்தப்படவுள்ளது. இதில், தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். இந்த முகாம் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் எட்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாகத் தோ்வு செய்து கொள்ளலாம். இந்த முகாமில் கலந்து கொள்பவா்கள் இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம்.

வேலை நாடுநா்கள் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04362- 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.