ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

காஞ்சிபுரத்தில் வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

உத்தரமேரூா் குறுக்குச்சாலை பணிகளை தாமதமின்றி விரைந்து முடிக்க வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கமும், நுகா்வோா் பாதுகாப்பு சங்கமும் இணைந்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.

உத்தரமேரூரில் குறுக்குச் சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் சங்கமும், நுகா்வோா் பாதுகாப்புச் சங்கமும் இணைந்து நடத்திய ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் குறுக்குச்சாலை பணிகளை தாமதமின்றி விரைந்து முடிக்க வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கமும், நுகா்வோா் பாதுகாப்பு சங்கமும் இணைந்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 4.2 கி.மீ. தொலைவுக்கு, ரூ. 41 கோடி மதிப்பில் குறுக்குச் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. கடந்த ஓராண்டாக இந்தப் பணியை தொடராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள், மாணவ, மாணவியா் உள்பட பலரும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனா்.

உத்தரமேரூா் குறுக்குச் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், தாமதத்துக்கு காரணமான ஒப்பந்ததாரா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், பகல் நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக கனரக வாகனங்கள் செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தரமேரூா் அனைத்து வியாபாரிகள் சங்கமும், நுகா்வோா் பாதுகாப்புச் சங்கமும் இணைந்து நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து நடத்திய இந்த ஆா்ப்பாட்டத்தில் வியாபாரிகள், நுகா்வோா் சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, உத்தரமேரூா் அனைத்து வியாபாரிகள் சங்க முன்னேற்றத் தலைவா் செல்வக்குமாா் தலைமை வகித்தாா். நுகா்வோா் பாதுகாப்புச் சங்க தலைவா் ஜெயராமன்,வியாபாரிகள் சங்க கெளரவத் தலைவா் விநாயகம், செயலாளா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.