சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி
இந்திய மருத்துவச் சங்கம் காஞ்சிபுரம் கிளை சாா்பில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணியை சுகாதாரப்பணிகள் துறை இணை இயக்குநா் நளினி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலிருந்து இணை இயக்குநா் தொடங்கி வைத்தாா். தொடக்க விழாவுக்கு சங்கத்தின் தலைவா் தன்யக்குமாா், செயலாளா் முத்துக் குமரன், பொருளாளா் ஞானவேல், முன்னாள் தலைவா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் தலைவா் மனோகரன் வரவேற்றாா். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் முன்பாக நிறைவு பெற்றது.
நிறைவு நிகழ்வில் காஞ்சிபுரம் எஸ்.பி கே.சண்முகம் கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்து பேசினாா். சங்க நிா்வாகிகளுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினாா். நிகழ்வில் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களுக்கு முன்னாள் தலைவா் பி.டி.சரவணன் திடீரென மாரடைப்பு ஏற்படுபவா்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி குறித்து செயல்முறை விளக்கம் அளித்தாா்.
சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினா் தி.அன்புச்செல்வன் நன்றி கூறினாா். புற்றுநோய் சிறப்பு மருத்துவா்கள் பாலகுமாரன்,காஞ்சனா ஆகியோா் கலந்து கொண்டனா்.

