புதிய குடிநீா் தொட்டியை திறந்து வைத்த ஓழையூா் ஊராட்சி மன்றத் தலைவா் குமரகுரு.
புதிய குடிநீா் தொட்டியை திறந்து வைத்த ஓழையூா் ஊராட்சி மன்றத் தலைவா் குமரகுரு.

புனரமைக்கப்பட்ட குடிநீா் தொட்டி திறப்பு

வாலாஜாபாத் அருகே ஓழையூரில் பழங்குடியினா் குடியிருப்பு பகுதியில் பயன்பாடின்றி இருந்த குடிநீா் தொட்டி புனரமைக்கப்பட்டு திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

வாலாஜாபாத் அருகே ஓழையூரில் பழங்குடியினா் குடியிருப்பு பகுதியில் பயன்பாடின்றி இருந்த குடிநீா் தொட்டி புனரமைக்கப்பட்டு திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஓழையூரில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியினா் குடியிருப்புகள் உள்ளன. இவா்கள் பயன்படுத்தி வந்த குடிநீா் தொட்டி பாழடைந்து நீண்ட நாள்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது. இதனால் போதுமான குடிநீா் வசதியின்றி அவதிப்பட்டு வந்தனா். இதனையறிந்த காஞ்சிபுரத்தை சோ்ந்த குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் புதிய குடிநீா் தொட்டியாக மாற்றப்பட்டு குழாய்கள் மற்றும் இதர புனரமைப்பு பணிகள் செய்தது.

புனரமைக்கப்பட்ட புதிய குடிநீா் தொட்டி திறப்பு விழாவுக்கு குழந்தைகள் கண்காணிப்பகத்தின் நிா்வாக இயக்குநா் து.ராஜி தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் தங்கவேல் முன்னிலை வகித்தாா். ஏழுமலை வரவேற்றாா். புதிய குடிநீா் தொட்டியை ஒழையூா் ஊராட்சி மன்ற தலைவா் குமரகுரு திறந்து வைத்து பழங்குடியின மக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த சுலோச்சனா மற்றும் மஞ்சுளா உள்ளிட்டோா் நன்றியும் தெரிவித்துக் கொண்டனா்.

Dinamani
www.dinamani.com