

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருராட்சியில் செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு பேரூராட்சித் தலைவா் இல்லாமல்லி ஸ்ரீதா் தலைை வகித்து,பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்களை கெளரவிக்கும் விதமாக புத்தாடைகள்,இனிப்புகள் மற்றும் அன்னதானமும் வழங்கினாா்.
விழாவில் துணைத் தலைவா் சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் யமுனா வரவேற்றாா். பேரூராட்சி திமுக இளைஞரணி அமைப்பாளா் சுகுமாறன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.