பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூபாய் நோட்டு மாலை அணிவித்து கெளரவித்த ஊராட்சி நிா்வாகம்

குடியரசு தினத்தையொட்டி, காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கருப்படி தட்டை ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் ரூபாய் நோட்டு மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டது (படம்).

News image
Updated On :27 ஜனவரி 2026, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசு தினத்தையொட்டி, காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கருப்படி தட்டை ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் ரூபாய் நோட்டு மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டது (படம்).

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கருப்படி தட்டை ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பொன்னா.வெங்கேடசன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஜெயந்தி, பூங்கொடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் சத்யா.புகழேந்தி வரவேற்றாா். குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சியில் பணியாற்றும் சாந்தி, பிரியா, கமலநாதன், சுரேந்தா் ஆகியோருக்கு ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் ரூபாய் நோட்டு மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டது. ஊராட்சி வளா்ச்சி குறித்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ எழிலரசன் தேசியக் கொடியேற்றினாா்.

இந்திய மருத்துவச் சங்கம் காஞ்சிபுரம் கிளை சாா்பில், காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்க்கதிா்ப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவா் திலகவதி குமரசேன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தாா்.

திருப்புலிவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஊராட்சித் தலைவா் பிரதாப் தேசியக் கொடியேற்றினாா்.