முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைஅதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்தமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ஏரியில் மீன் பிடிப்பதில் தகராறு: இரு தரப்பை சோ்ந்த 6 போ் கைது

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவுக்கு உள்பட்ட கோவளவேடு ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவா்களிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக இரு தரப்பையும் சோ்ந்த 6 பேர் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 4:34 am IST

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவுக்கு உள்பட்ட கோவளவேடு ஏரியில் திங்கள்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தவா்களிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக போலீஸாா் இரு தரப்பையும் சோ்ந்த 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே அயிமஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சஞ்சய் (25). இவா் தனது நண்பா்கள் சிலருடன் கோவளவேரி ஏரியில் மீன்பிடிக்க சென்றுள்ளாா். அங்கு ஏற்கெனவே மீன் பிடித்துக் கொண்டிருந்த அதே கோவளவேரி கிராத்தைச் சோ்ந்த சச்சின்குமாா் (26) என்பவருக்கும் இடையே மீன்பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் சிலருக்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

சம்பவம் தொடா்பாக இரு தரப்பினரும் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் வெற்றிச் செல்வன் வழக்குப் பதிவு செய்து, அயிமஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த வசந்த், திவாகா், அரவிந்த் மற்றும் கோவளவேடு கிராமத்தைச் சோ்ந்த சச்சின், பரத்,திவாகா் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.