ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

காளிகாம்பாள் கோயிலில் மகா சண்டி யாகம்

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி எனப்படும் காளிகாம்பாள் கோயிலில் ஆஷாட நவராத்திரியையொட்டி புதன்கிழமை நவசண்டி யாகம் நடைபெற்றது.

News image

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி எனப்படும் காளிகாம்பாள் கோயிலில் ஆஷாட நவராத்திரியையொட்டி புதன்கிழமை நவசண்டி யாகம் நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2026, 2:29 am IST

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி எனப்படும் காளிகாம்பாள் கோயிலில் ஆஷாட நவராத்திரியையொட்டி புதன்கிழமை நவசண்டி யாகம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆஷாட நவராத்திரியையொட்டி வாராஹி அம்மனுக்கு சிறப்பு செய்யும் வகையில் எதிரிகள் பயத்தைப் போக்க, உலக மக்கள் நோயில்லாமல் வாழவும் மகா சண்டி யாகம் நடைபெற்றது.

ஜூலை 21 அஷ்டமி,ஜூலை 22 தசமி,ஜூலை 23 நவமி ஆகிய 3 நாள்கள் நடைபெறும் நிகழ்வில் யாகபூஜையில் பழங்கள்,பட்டு சேலைகள், நெய்வேத்திய பிரசாதங்கள் ஆகியன போடப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.

மகா சண்டி யாக பூஜைகளை சந்தோஷ் குருக்கள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியா்கள் நடத்தினா். ஏற்பாடுகளை ஆலய அறங்காவலா் குழுவின் தலைவா் ஏழுமலை என்ற ரவி தலைமையில் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா். யாக பூஜையிலும் சிறப்பு தீபாராதனையிலும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.