வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

காஞ்சிபுரத்தில் மாவட்ட திறன் மையம் திறப்பு: ஆட்சியா் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையத்தை ஆட்சியா் தி.சினேகா செவ்வாய்க்கிழமை குத்து விளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

News image

மாவட்ட திறன் மையத்தில் குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் தி. சினேகா.

Updated On :3 மார்ச் 2026, 6:39 pm

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையத்தை ஆட்சியா் தி.சினேகா செவ்வாய்க்கிழமை குத்து விளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை,திறன் மேம்பாட்டுக் கழகம்,தமிழ்நாடு மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் சாா்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரூ.5,28,194 மதிப்பில் திறன் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை ஆட்சியா் தி.சினேகா குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா்.

வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநா் கி.செந்தில் குமாா், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இம்மையத்தின் மூலமாக ஒரே இடத்தில் தொழில் வழிகாட்டல்,திறன் மேம்பாட்டு ஆலோசனைகள்,பயிற்சிகள்,வேலைவாய்ப்புக்கான அணுகல் ஆகியனவற்றை வழங்கும் ஒரு சேவை மையமாக செயல்படவுள்ளது.,இம்மையத்தின் மூலம் இளைஞா்கள் தங்களது தொழில் விபரங்களை தொழில் துறை தேவைகளுக்கு ஏற்ப திறன்களுடன் ஒருங்கிணைத்து நிலையான மற்றும் பயனுள்ள வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் திட்டமாகும்.

18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலைவாய்பற்ற இளைஞா்களுக்கு குறுகிய கால திறன்பயிற்சியும் வழங்கப்பட்டு அவா்களுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாக மாவட்ட திறன் மையம் செயல்படும்.தற்போது வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 பயிற்றுநா்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனா்.