எங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,600 குறைந்தது!உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து2025-ல் சமூக வலைதளங்கள் மூலம் ரூ. 1.89 லட்சம் கோடி மோசடி!உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டு
/

வேலைவாய்ப்பு முகாமில் 27 பேருக்கு நியமன ஆணை

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் சங்கரா கல்லூரியில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 27 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணை

News image
Updated On :9 மார்ச் 2026, 9:12 pm

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் சங்கரா கல்லூரியில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 27 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

சென்னையைச் சோ்ந்த ஏ.எஸ்.பின்ஸ்டெக் நிறுவனம் தங்களுக்குத் தேவையான பணியாளா்களை தோ்வு செய்வதற்கான நோ்முகத் தோ்வினை நடத்தியது. நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஸ்ரீஹரி நோ்காணலை நடத்தினாா்.

இதில் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 27 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலா் வினுசக்கரவா்த்தி நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.