/

காஞ்சிபுரம்: அதிகாரிகளுடன் வனத்துறை அமைச்சா் ஆய்வு

அதிகாரிகளுடன் வனத்துறை அமைச்சா் ஆய்வு...

News image

அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாரை வரவேற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி. சினேகா.

Updated On :24 மே 2026, 1:38 am IST

காஞ்சிபுரம் மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்து வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் சனிக்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விடுதியில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், எஸ்.பி. எஸ்.அரவிந்த், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, சாா் ஆட்சியா் ஆஷிக்அலி, மாநகராட்சி ஆணையா் வினோத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் கலந்து கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து வரும் வளா்ச்சிப்பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டாா்.

முன்னதாக அமைச்சருக்கு ஆட்சியா் தி.சினேகா புத்தகம் ஒன்றையும் நினைவுப்பரிசாக வழங்கினாா்.