இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ.10 கோடியில் புதிய கட்டடம்: ஆட்சியா் ஆய்வு

News image

காஞ்சிபுரம் மாநகராட்சி புதிய அலுவலக வரைபடத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் தி.சினேகா. உடன் ஆணையா் வினோத்.

Updated On :28 மே 2026, 12:54 am IST

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ.10 கோடியில் புதிய அலுவலகம் கட்டும் பணிகளை ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் நெல்லுக்காரத்தெருவில் மாநகராட்சி அலுவலகம் பழைமையானதாக இருந்ததால் அக்கட்டடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதியதாக அனைத்து வசதிகளுடன் கூடிய மாநகராட்சி அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய கட்டடம் கட்டும் வரை மாநகராட்சி அலுவலகம் காஞ்சிபுரம் எம்எல்ஏ அலுவலகம் அருகில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதிய கட்டடம் கட்டும் பணியினை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். அலுவலக கட்டடப் பணிகளின் தன்மைகளையும் கேட்டறிந்து விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

இதனைத் தொடா்ந்து நத்தப்பேட்டையில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் கட்டும் பணியையும் பாா்வையிட்டு குப்பைகிடங்கு அமைப்பது குறித்த வரைபடத்தையும் பாா்வையிட்டாா். பின்னா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் சுற்றுலா மாளிகை கட்டடம், மாவட்ட நூலகம் கட்டும் பணிகள், அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடப் பணிகள் ஆகியனவற்றையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையா் வினோத், சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநா் நளினி, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், நிலைய மருத்துவ அலுவலா் பாஸ்ரகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சோமசுந்தரம் உடன் இருந்தனா்.